ஆலந்தூர் தொகுதி சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்கள் வழங்குதல்

100

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு, அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வழியின்றி தவித்துவரும் ஈழச்சொந்தங்களுக்கு உதவுவதற்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாட்டில் இருந்து அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, மாவு, ரொட்டி, பிஸ்கட் போன்ற உணவுப்பொருட்களும், துயர்துடைப்பு உதவிப்பொருட்களும் சேகரிக்கப்பட்டு இலங்கையில் உள்ள நம் ஈழச்சொந்தங்களுக்கு அனுப்பப்படவிருக்கிறது.

தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பேரறிவிப்பையடுத்து, ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்களை வாகனத்தின் மூலம் சென்னை திருவொற்றியூர், இராதாகிருஷ்ணன் நகர் எல்லையம்மன் கோயில் அருகில் அமைக்கப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு, பொருட்கள் பிரித்து அடுக்கிவைக்கப்பட்டுள்ளது.ஆலந்தூர் தொகுதி

நிர்வாகிகள், திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் இர.கோகுல், திருவொற்றியூர் தொகுதி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

Exit mobile version