தங்கவயல் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை அன்று 21-2-2022 உலகத் தாய்மொழி நாள் நிகழ்ச்சி தங்கவயல், உரிகம்பெட்டை நல் மேய்ப்பன் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கருநாடக மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா வெற்றிசீளன் தலைமை ஏற்க மாநில துணைச் செயலர் ஐயா பிரதாப் குமார் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் பல்வேறு மொழியை சார்ந்த பள்ளி மாணவர்கள் தங்களது தாய்மொழியின் சிறப்பை பற்றி எடுத்துக் கூறினார்கள்.
நிகழ்வில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.



