கொடைக்கானல் அருகே பாச்சலூரிலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பச்சிளஞ்சிறுமியைப் பட்டப்பகலில் எரித்துக்கொன்ற செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். பிஞ்சுக்குழந்தையை எரித்துக் கொன்ற இக்கோரச்செய்தி நெஞ்சத்தைப் பதைபதைக்கச் செய்கிறது.
https://bit.ly/3scAIU4
(1/3)

குழந்தையைக் கொடூரமாகக்கொன்ற கொடுங்கோலர்களை உடனடியாக கண்டறிந்து கைதுசெய்து, கடும்சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டுமெனவும், இக்கொடுமைகளை விளைவித்தக் கொலையாளிகளுக்கு சட்டத்தின்படி தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக @CMOTamilnadu கேட்டுக்கொள்கிறேன்.
ஆற்ற முடியாப் பேரிழப்பில் சிக்கித் தவிக்கும் அக்குழந்தையின் பெற்றோர்களுக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கிறேன்.
(2/3)



