பாட்டன் வ.உ.சிதம்பரனார் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ்வணக்க நிகழ்வு – தலைமையகம் (சென்னை)

47

செய்திக்குறிப்பு: பாட்டன் வ.உ.சிதம்பரனார் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ்வணக்க நிகழ்வு – தலைமையகம் (சென்னை) | நாம் தமிழர் கட்சி

தாய்மண்ணின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல்! ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பலோட்டிய தமிழறிஞர்! நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று 05-09-2021 காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

🔴நேரலை 05-09-2021 பாட்டன் வ.உ.சிதம்பரனார் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ்வணக்க நிகழ்வு  - சென்னை

இந்நிகழ்விற்கு தலைமையேற்ற சீமான் அவர்கள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த வ.உ.சிதம்பரனார் திருவுருவப் படங்களுக்கு முன்பு நினைவுச் சுடரேற்றி, மலர் வணக்கம் மற்றும் புகழ் வணக்கம் செலுத்தினார். உடன், நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி