சட்டமன்றத் தேர்தல்-2021 வேட்பாளர்கள் தேர்வு மற்றும் களப்பணிகள் குறித்து அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்வதற்காக சனவரி 22 முதல் 31 வரை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மண்டலவாரியாக தஞ்சாவூர், திருநெல்வேலி, மதுரை, விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், வேலூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுவரும் கலந்தாய்வுக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.
23-01-2021 அன்று காலை 10 மணியளவில் பாளையங்கோட்டை எல்.எஸ்.மகாலில் நடைபெற்ற தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.
வெல்லப்போறான் விவசாயி!
சட்டமன்றத் தேர்தல்-2021 குறித்து தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டக் களப்போராளிகளுடன் கலந்தாய்வு.
23-01-2021 | பாளையங்கோட்டை#VellaporanVivasayi | #TNElections2021 | #NTK4TamilNadu pic.twitter.com/lpNfxaKi80
— சீமான் (@SeemanOfficial) January 23, 2021




