செய்திக் குறிப்பு: சேலம், நாமக்கல் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை | நாம் தமிழர் கட்சி
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், 25-03-2019 முதல் 16-04-2019 வரை தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.
ஏழாம் நாளான நேற்று 31-03-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 05 மணியளவில், சேலம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் இராஜா அம்மையப்பன் அவர்களை ஆதரித்து சேலம் தெற்கு நகரம் (தாதகா பட்டி) பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
காணொளி: https://www.youtube.com/watch?v=99HA_jMZAJw
அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில், நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் மருத்துவர் பாஸ்கரன் அவர்களை ஆதரித்து நாமக்கல் (ராஜா மகால், வாங்கிலி உணவகம் அருகில், திருச்செங்கோடு சாலை )பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.