ஈரோடு , திருப்பூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை

224

செய்திக் குறிப்பு: ஈரோடு , திருப்பூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை | நாம் தமிழர் கட்சி

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், 25-03-2019 முதல் 16-04-2019 வரை தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.

எட்டாம் நாளான நேற்று 01-04-2019 திங்கள்கிழமை மாலை 05 மணியளவில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சீதாலக்ஷ்மி அவர்களை ஆதரித்து ஈரோடு, வீரப்பன் சத்திரம், பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
காணொளி: https://www.youtube.com/watch?v=5Q7gTf9JNR8

01-04-2019 ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை #Seeman Full Speech at Erode

அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில், திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ப.ஜெகநாதன் அவர்களை ஆதரித்து திருப்பூர் யூனியன் மில் ரோடு, ஸ்ரீ சக்தி திரையரங்கம் அருகில் .தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

காணொளி: https://www.youtube.com/watch?v=FkEN9wQh9xk

01-04-2019 திருப்பூர் நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை #Seeman Full Speech at Thirupur