முகப்பு கட்சி செய்திகள்

ஆர்.கே நகர் தேர்தல்: 09-12-2017 ஒன்பதாவது நாள் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்

142

செய்தி: ஆர்.கே நகர் தேர்தல்: 09-12-2017 ஒன்பதாவது நாள் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம் | நாம் தமிழர் கட்சி

வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனையொட்டி கடந்த 01-12-2017 முதல் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரைப் பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

ஒன்பதாவது நாளான நேற்று 09-12-2017 (சனிக்கிழமை) காலை 09 மணி முதல் 12 மணிவரை வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன், இராவணன், கொள்கைப்பரப்பு செயலாளர் ஜெயசீலன், மகளிர் பாசறை அமுதா நம்பி, ஆர்.கே நகர் சம்பத் மற்றும் மணிகண்டன், மாணவர் பாசறை கார்த்திக் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் 40வது வட்டம், சிவகாமி நகர், மங்கம்மாள் தோட்டம், சுணாமி குடியிருப்பு, சிவன் நகர், ஜீவா நகர், பர்மா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பிற்பகல் 02 மணி முதல் 5 மணிவரை 40வது வட்டம், கீரை தோட்டம், அம்மனியம்மாள் தோட்டம், திருவள்ளுவர் குடியிருப்பு, வ.உ.சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து மாலை 06 மணிக்கு அன்புத்தென்னரசன் தலைமையில் 40வது வட்டம், வ.உ.சி நகர் கடை வீதி அருகில் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சை கரிகாலன், கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை ஈஸ்வரன், இடும்பாவனம் கார்த்திக், ஆர்.கே நகர் சம்பத் மற்றும் மணிகண்டன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இறுதியாக வேட்பாளர் கலைக்கோட்டுதயம் அவர்கள் ஆர்.கே நகரில் நாம் தமிழர் கட்சி செயல்படுத்தவிருக்கும் திட்டங்களை எடுத்துக்கூறி உரையாற்றினார்.

Exit mobile version