முகப்பு தலைமைச் செய்திகள்

அறிவிப்பு; ஆர்.கே நகர் தேர்தல்: 11-12-2017 11வது நாள் | சீமான் பரப்புரைத் திட்டம்

77

அறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 11-12-2017 11வது நாள் பரப்புரைத் திட்டம் | நாம் தமிழர் கட்சி

வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். இதனையொட்டி கடந்த 01-12-2017 முதல் நமது கட்சியின் தேர்தல் பரப்புரைப் பணிகள் முழுவீச்சில் தொடங்கி தொடர்ந்து 10 நாட்களாக நடைபெற்றுவருகிறது.

11வது நாள் 11-12-2017 (திங்கட்கிழமை) பரப்புரை மேற்கொள்ளவிருக்கும் திட்டவிவரம்:

தலைமை: சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர்

நேரம்: காலை 09:30 மணி முதல் வாக்கு சேகரிப்பு மற்றும் வீதிப்பரப்புரை
துவங்குமிடம்: 47வது வட்டம், அம்பேத்கர் நகர், மீனாம்பாள் நகர், பாரதி நகர், சிக்கரந்தபாளையம், ஜே ஜே நகர்.

நேரம்: மாலை 06 மணிக்கு பரப்புரைப் பொதுக்கூட்டம்
எழுச்சியுரை: சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர்
இடம்: 47வது வட்டம், மன்னப்பன் தெரு, H4 காவல் நிலையம் அருகில்
தொடர்புக்கு: *9003555217 / 9962079122*

விருகம்பாக்கம், அண்ணாநகர், தியாகராய நகர், சைதாபேட்டை தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டப் பொறுப்பாளர்கள் பரப்புரைப் பணிகளில் இடைத்தேர்தல் பணிக்குழுவோடு இணைந்து செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அனைத்து தொகுதி நாம் தமிழர் உறவுகளும் ஆர்.கே நகர் தொகுதி தேர்தல் பரப்புரைகளில் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

Exit mobile version