அறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 15-12-2017 15வது நாள் | சீமான் பரப்புரைத் திட்டம்

101

அறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 15-12-2017 15வது நாள் | சீமான் பரப்புரைத் திட்டம் | நாம் தமிழர் கட்சி

வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். இதனையொட்டி கடந்த 01-12-2017 முதல் நமது கட்சியின் தேர்தல் பரப்புரைப் பணிகள் முழுவீச்சில் தொடங்கி தொடர்ந்து 14 நாட்களாக நடைபெற்றுவருகிறது.

15வது நாள் 15-12-2017 (வெள்ளிக்கிழமை) அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரப்புரை மேற்கொள்ளவிருக்கும் திட்டவிவரம்:

நேரம்: காலை 09:30 மணி முதல் பகல் 12 மணிவரை வாக்கு சேகரிப்பு
துவங்குமிடம்: 42வது வட்டம், தண்டையார்பேட்டை மணிக்கூண்டு, திலகர் நகர், சுனாமி குடியிருப்பு. இரட்டைகுழி தெரு, அப்பாசாமி தெரு, வீரா குட்டி தெரு.

நேரம்: பிற்பகல் 02 மணி முதல் பிற்பகல் 03 மணிவரை வீதிப்பரப்புரை
துவங்குமிடம்: 42வது வட்டம், மேயர் பாசு தெரு

நேரம்: பிற்பகல் 03 மணி முதல் மாலை 05 மணிவரை வீதிப்பரப்புரை
துவங்குமிடம்: 47வது வட்டம், இரங்கநாதபுரம் குடிசைமாற்று வாரியம்

நேரம்: மாலை 06 மணிக்கு பரப்புரைப் பொதுக்கூட்டம்
எழுச்சியுரை: சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர்
இடம்: 42வது வட்டம், மேயர் பாசு தெரு, சந்தை அருகில்

தொடர்புக்கு: ரவி: 9566120956 / ஸ்ரீதர்: 8072634457

ஆயிரம்விளக்கு, திருவல்லிக்கேணி-சேப்பாக்கம், வேளச்சேரி, ஆவடி, அம்பத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நாகப்பாட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளர்கள் பரப்புரைப் பணிகளில் இடைத்தேர்தல் பணிக்குழுவோடு இணைந்து செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அனைத்து தொகுதி நாம் தமிழர் உறவுகளும் ஆர்.கே நகர் தொகுதி தேர்தல் பரப்புரைகளில் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084