‘சமூகநீதிப் போராளி’ இமானுவேல் சேகரனார் 60ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்

180

‘சமூகநீதிப் போராளி’ பெருந்தமிழர் ஐயா இமானுவேல் சேகரனார் 60ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம் | நாம் தமிழர் கட்சி

பிறப்பின் அடிப்படையில் மனிதன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பேதம்பார்க்கும் சாதிய நோயை ஒழிப்பதற்குப் போராடிய பெருந்தகை நமது ஐயா இமானுவேல் சேகரனாரின் 60ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 11-09-2017 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சென்னையிலுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நினைவேந்தல் சுடரேற்றி மலர்வணக்கம் செய்தார்.

11-09-2017 இமானுவேல் சேகரனார் 60ஆம் ஆண்டு நினைவுநாள் - சீமான் மலர்வணக்கம்

மாநில ஒருங்கிணைப்பாளர் கதிர்.இராஜேந்திரன், மாநில கொள்கை பரப்பு செயலாளர்கள் புதுக்கோட்டை ஜெயசீலன், பேராவூரணி திலீபன், மாநில செய்திப்பிரிவு இணை செயலாளர் செந்தில்குமார், மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் சாரதி ராசா, கிருஷ்ணன், இடும்பாவனம் கார்த்திக், ஆவடி நல்லதம்பி, பெரம்பூர் வெற்றிச்செல்வன், மதுரவாயல் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை தலைமை அலுவலக நிர்வாகி அரசுசூர்யா ஏற்பாடு செய்திருந்தார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி