முகப்பு கட்சி செய்திகள்

பேருந்து இயக்கக்கோரி ஈரோடை நாம் தமிழர் சார்பாக கையெழுத்து இயக்கம்

45

கோபி மற்றும் பவானி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஓடத்துறை ஊராட்சியில் போதிய பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளதால் மாணவர்களும், தொழிலாளர்களும் கடும் இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். சீரான கால இடைவெளியில் போதிய பேருந்துகளை இயக்க வலியுறுத்தி ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் 14/12/2014 அன்று காலை 7 மணிமுதல் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.

நாம் தமிழர் கட்சியின் விண்ணப்பமும், பொதுமக்களிடம் பெறப்பட்ட கையெழுத்துக்களும் 05/01/2015 அன்று  ஈரோடை மாவட்ட ஆட்சியர் எஸ். பிரபாகரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. விண்ணப்பத்தின் மீது ஒரு வாரத்திற்குள் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறி, தமிழ்நாடு போக்குவரத்து கழக மாவட்ட மேலாளரிடம் பணியை கையளித்துள்ளார்.

Exit mobile version