முகப்பு கட்சி செய்திகள்

[படங்கள் இணைப்பு] நெல்லை திசையன் விளையில் (25-03-11) துவங்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் காங்கிரசுக்கு எதிரான தேர்தல் யுத்தம்.

107

தமிழ் தேசிய இனத்தின் உடமைக்கு, உயிருக்கு உணர்வுக்கும் எதிராக செயல்பட்டு ஈழத்தில் தமிழர்களின் விடுதலை போராட்டத்தை ஒடுக்கி தமிழ் இனத்தை கொத்துகொத்தாய் கொன்று குவித்த சிங்கள அரசுக்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் தோற்கடிக்கும் பணியில் நாம் தமிழர் கட்சி ஈடுபடும். இதற்காக 17 நாள் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் செய்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக முழக்கமிடவுள்ளார்.

இதனையடுத்து நெல்லை மாவட்டம் திசையைன் விளையில் நேற்றைய தினம் 25-3-2011 அன்று தொடங்கிய நாம் தமிழர் கட்சியின் பரப்புரையில் மாலை 6 மணிக்கு திசையன் விளையில் பிரம்மாண்டமான பொதுகூட்டம் நடைபெற்றது. இக் கூட்டதின் துவக்கமாக வீரத்தாய் பார்வதி அம்மாள் அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் அவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டு தமிழர் நிலப்பரப்பின் மற்றும் ஒரு தாய் நிலமான தமிழ் ஈழ மண்ணில் எம் இனத்தின் விடுதலை போராட்டத்தை ஒடுக்கி ஈழத்து உறவுக்களை கொன்று குவிக்க சிங்கள இனவெறி அரசிக்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சியை 2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் தோற்கடிப்பதை  லட்சியமாய் ஏற்று காங்கிரசை கருவருக்க அடித்தளமாக இப் பொதுகூட்டத்தை அமைத்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனது  போர் முழக்கத்தை ஆரம்பித்தார் மேலும் இப் பொதுக்கூட்டத்தில் தமிழ் முழக்கம் சாகுல் அமீது, ஆன்றோர் அவைக்குழு உறுப்பினர் ஐயா அறிவரசன், மாநில ஒருங்கிணைப்பாளர்களான வழக்கறிஞர் சிவக்குமார், மதுரை வெற்றிக்குமரன், கோவை கார்வண்ணன், வழக்கறிஞர் நல்லதுரை, தலைமை கழக பேச்சாளர் ஜெயசீலன், பேச்சாளர் திலீபன், நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார், மகளிர் அணியைச் சேர்ந்த திருமதி அமுதா நம்பி, திருமதி வெற்றிக்கொடி உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான நாம் தமிழர் கட்சி உறவுகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சியின் காங்கிரசுக்கு எதிரான அரசியல் யுத்தத்தில் தங்களையும் ஈடுபடுத்தி கொண்டனர்.

புகைப்பட தொகுப்பு:


Exit mobile version