[படங்கள் இணைப்பு]வருகின்ற 12-2-2011 அன்று கரூரில் நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்.

1016

கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக நாளை 12-2-2011 அன்று மாலை 5 மணியளவில் கரூர் 80 அடி சாலையில் விலைவாசி உயர்வுக்கு காரணமாக மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து மாபெரும் பொதுகூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறப்புரை ஆற்றவுள்ளார்.

இக்கூட்டத்திற்கு மக்களை அழைக்கும் விதமாக நகரின் பல முக்கிய பகுதிகளில் சுவர் விளம்பரம் மற்றும் சுவரொட்டி மூலம் பரப்புரை செய்துள்ளனர்.