செங்கம் தொகுதி மாதக் கலந்தாய்வுக் கூட்டம்
03.09.2023 அன்று செங்கம் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் வளர்ச்சிக் குறித்தும் மாத வரவு செலவு கணக்கு வெளியிடுவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. நன்றி!
செங்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
செங்கம் தொகுதி சார்பாக பேருந்து நிலையம் அருகில் அம்பேத்கர் சிலை எதிரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு 100 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும் 23 புதிய உறவுகள் நாதக-வில் தங்களை...
வந்தவாசி தொகுதி புலிக்கொடி கம்பம் நடும் நிகழ்வு
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி பெரணமல்லூர் கிழக்கு ஒன்றியம் வல்லம் கிராமத்தில் புலிக்கொடிகம்பம் நடும் விழா ச.சரவணன்(தொ.து.தலைவர்)
ப.மாதவன், தீனதயாளன், சிவா ஆகியோர் முன்னெடுப்பில் இரா.கணேஷ்(மா.த.தொ.பா.து.செயலாளர்)கொடியேற்றி வைத்தார்.
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக தெள்ளாறு வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
செங்கம் தொகுதி கக்கன் புகழ் வணக்க நிகழ்வு
செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியம் கீழ்வணக்கம்பாடி ஊராட்சியில் தியாக சீலர் நேர்மையின் பெருவடிவம் ஐயா கக்கன் அவர்களின் 115வது பிறந்தநாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் உறவுகளால் அப்பகுதி மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
செங்கம் தொகுதி மாதக் கலந்தாய்வுக் கூட்டம்
மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் செங்கம் தொகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக் குறித்தும் கிளை கட்டமைப்புப் பற்றியும் மாத வரவு செலவு வெளியிடுதல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
செங்கம் தொகுதி திருவள்ளுவர் நகர் உறுப்பினர் சேர்க்கை முகாம்
20.08.2023 அன்று செங்கம் பேரூராட்சி திருவள்ளுவர் நகரில் அ.கார்த்தி முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 22 புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சியில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
செங்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
செங்கம் மேற்கு ஒன்றியம் மண்மலையில் தொகுதி இணைச் செயலாளர் வெங்கடேசன் ஒருங்கிணைப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் 62 உறுப்பினர்கள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
செங்கம் தொகுதி பெரும்பட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
செங்கம் தொகுதி மேல்புழுதியூர் ஊராட்சி பெரும்பட்டம் கிராமத்தில் 13.08.2023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 27 உறவுகள் நாம் தமிழர் கட்சியில் தங்களை புதிய உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். உறவுகளுக்கு...
செங்கம் தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்
04.06.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதியின் மாதந்திர கலந்தாய்வுக் கூட்டம் தண்டராம்பட்டில் நடைபெற்றது.
