திருப்போரூர்

Thiruporur திருப்போரூர்

திருப்போரூர் தொகுதி மரக்கன்று நடுதல்

07.03.23-கட்சியின் சார்பாக மாமல்லபுரம் பள்ளிக்கு மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டன. திருப்போரூர் கிழக்கு ஒன்றிய தலைவர் திரு.ராஜாஅவர்கள் முன்னின்று மாமல்லபுரம் பள்ளியில் அங்குள்ள மாணவர்கள் மற்றும் பணியாளர்களுடன் மரக்கன்றுகளை நட்டார்.

திருப்போரூர் தொகுதி மரக்கன்று நடுதல்

11.03.23 சனிக்கிழமை அன்று திருப்போரூர் தொகுதி குழிப்பந்தண்டலத்தில் தி.க.குன்றம் ஒன்றியதலைவர் திரு.ராஜா தலைமையில் 16 இலுப்பைமர கன்றுகள் வைக்கப்பட்டன.இந்த கன்றுகளை தொகுதி செயலாளர் திரு. தேவராஜ் அவர்கள் இலவசமாக வழங்கினார்.

திருப்போரூர் தொகுதி நடுவன் ஒன்றிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருப்போரூர் பேருந்து நிலையத்தில் நடுவன் ஒன்றிய தலைவர் திரு.வீரராகவன் மற்றும் தொகுதி செயலாளர் திரு.சசிகுமார் குழுவினர் முன்னின்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தினர். மாவட்ட நிர்வாகிகள் இம்முகாமில் கலந்து கொண்டு மரக்கன்றுகள் வழங்கினர்.

திருப்போரூர் தொகுதி – கொடியேற்றும் விழா

திருப்போரூர் தொகுதி திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றியம் சார்பில்  சோகண்டி ஊராட்சியில் 08-01-2023 மகளிர்கள் கட்சியில் உறுப்பினராக இணைந்தனர் அதே பகுதியில்  காலை 8:00 மணியளவில் நமது கொடி ஏற்றப்பட்டது அதனை தொடர்ந்து திருமணி ஊராட்சி...

திருப்போரூர் தொகுதியில் பொங்கல் திருவிழா கொண்டாட்டங்கள்

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு திருப்போரூர் தொகுதி இள்ளலூர் கிராமத்தில் கபடி,கைப்பந்து,மட்டைபந்து,ஓட்டபந்தையம் போன்ற விளையாட்டுக்கள் நடுவண்ஒன்றிய பொறுப்பாளர் களால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு போட்டிகளில் பங்குபெற்றோருக்கு பரிசுகள் அளிக்கப்பட்டன.

திருப்போரூர் தொகுதியில் உழவர்களுக்கு பச்சை துண்டு அணிவித்து மரியாதை

திருப்போரூர் தொகுதி இள்ளலூரில் நமது கட்சி சார்பாக விவசாயிகளை சந்தித்து அவர்கள் உழவு செய்யும் இடத்திற்கு சென்று உழவு செழிக்க வேண்டும் என்று அவர்களை ஊக்கபடுத்த பச்சை துண்டு போர்த்தி நமது கட்சியினரால்...

திருப்போரூர் தொகுதியில் கொடி ஏற்றும் விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருப்போரூர் தொகுதி திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட சோகண்டி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது. மேலும் செங்கை கிழக்கு, திருப்போரூர் தொகுதி மகளிர் இணைந்து மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் திருமணியில் நடத்தினர்.

திருப்போரூர் சட்டமன்ற தொகுதி  – மாபெரும் கொடியேற்றும் விழா

தமிழ்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு 20.11.2022 ஞாயிறு அன்று திருப்போரூர் சட்டமன்ற தொகுதி முழுக்க பேரணியாகச் சென்று 30 க்கும் மேற்பட்ட இடங்களில் மாபெரும் புலிக்கொடி ஏற்றும்  நிகழ்வு வெகு சிறப்பாக ஆரவாரத்துடன் நடந்தது. இந்திகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.ஜெகதீச பாண்டியன் அவர்கள்,மாநில பொருளாளர் - திரு.இராவணன் அவர்கள், தென்சென்னை மாவட்ட செயலாளர் திரு.புகழேந்திமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் செங்கல்பட்டு  கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.கேசவன் மற்றும் தலைவர் திரு.சுந்தரராஜன்  மற்றும்  பொருளாளர் திரு.அபிலானந்தன் மற்றும் மாவட்ட மகளிர் பாசறை, ஆன்றோர் அவையம், தமிழ்மீட்சி பாசறை, சுற்றுசூழல் பாசறை, வீர தமிழர் முன்னணி, மீனவர் பாசறை, தகவல் தொழில் நுட்ப பாசறை போன்ற பாசறை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை சிறப்பாக நடத்திய திருப்போரூர் தொகுதி பொறுப்பாளர்கள் விவரம் பின்வருமாறு :- தலைவர் திரு.வி.சந்தோஷ்குமார்  செயலாளர் திரு.ம.தேவராஜ் இ.செயலாளர் திரு.சசிகுமார் து.செயலாளர் திரு.பொன்.தமிழரசன் து.தலைவர் திரு.புஷ்பலிங்கம் து.தலைவர் திரு.நேதாஜி பொருளாளர் திரு.ஜெயன் செய்தித்தொடர்பாளர் - திரு.ர.அன்பழகன் ஜோதிமகேஸ்வரி - தகவல் தொழில் நுட்ப பாசறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்

தலைமை அறிவிப்பு – செங்கல்பட்டு கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (செங்கல்பட்டு மற்றும் திருப்போரூர் தொகுதிகள்)

க.எண்: 2022090379 நாள்: 01.09.2022 அறிவிப்பு: செங்கல்பட்டு கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (செங்கல்பட்டு மற்றும் திருப்போரூர் தொகுதிகள்)    செங்கல்பட்டு கிழக்கு மாவட்டப் பொருளாளராக செயற்பட்டு வந்த பு.சுந்தர்ராஜன் (01337261055) அவர்கள் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத் தலைவராகவும், கி.அபிலானந்த்...

தலைமை அறிவிப்பு – திருப்போரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022090380 நாள்: 01.09.2022 அறிவிப்பு: திருப்போரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்   திருப்போரூர் பேரூராட்சிப் பொறுப்பாளர்கள் தலைவர் ப.பிரபு 10707417070 துணைத் தலைவர் நா.விமல் 14026383112 துணைத் தலைவர் க.இராஜ் 17236950975 செயலாளர் மு.அருள் குமார் 17183950025 இணைச் செயலாளர் ச.விஜய கோபால் 14946701197 பொருளாளர் வெ.லோகேஷ் 01341790646 மாமல்லபுரம் பேரூராட்சிப் பொறுப்பாளர்கள் தலைவர் நா.சோலைராஜா 17573961197 துணைத் தலைவர் து.ராஜேந்திர குமார் 01461110956 துணைத் தலைவர் தி.தொல்காப்பியன் 01461271417 செயலாளர் பா.மணிகண்டன் 01461311084 இணைச் செயலாளர் து.மகேந்திரன் 13612258959 துணைச் செயலாளர் இரா.தங்கராஜ் 01461534381 பொருளாளர் தா.பாலகிருஷ்ணன் 13977430454 செய்தித் தொடர்பாளர் அ.மொய்தீன் 16879369457 திருக்கழுகுன்றம் பேரூராட்சிப் பொறுப்பாளர்கள் செயலாளர் க.வெங்கடேசன் 01461031700       திருப்போரூர் நடுவன்...
Exit mobile version