மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்

கடலூர் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிகோரி மனு

விளைந்த நெற்பயிர்களை அழித்து,பணிகளைத் தொடங்கியுள்ள நிலக்கரி நிறுவனத்தின் அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டி அண்ணன் சீமான் அவர்களால் முன்னெடுக்கவிருக்கும் ஆர்ப்பாட்டத்திற்குஅனுமதி வேண்டி கடலூர் கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்து அனுமதி கோரப்பட்டது

திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு கூட்டம்

30/07/2023 அன்று நாம் தமிழர் கட்சி கிளை கலந்தாய்வு திட்டக்குடி தொகுதி பாசார் கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது.இதில் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர் நியமனம் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது.

ஆற்காடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம்,ஆற்காடு தொகுதி,மாணவர் பாசறை முன்னெடுத்த திமிரி பேரூராட்சியில் இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

விருத்தாச்சலம் தொகுதி கொடிகம்பம் அமைத்தல்

விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட பொன்னேரி புறவழிச்சாலையில் புலி கொடி மாநில ஒருங்கிணைப்பாளர் அமுதா நம்பி அவர்கள் தலைமையில் புதிதாக ஏற்றப்பட்டது

மண்ணச்சநல்லூர் தொகுதி மேற்கு ஒன்றிய உறுப்பினர் சேர்கை முகாம்

மண்ணச்சநல்லூர் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட நாச்சம்பட்டி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

மேட்டூர் சட்டமன்றத் தொகுதி மேச்சேரி ஒன்றிய பகுதி கலந்தாய்வு கூட்டம்

மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும், சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும் தொகுதி உள்கட்டமைப்பை உருவாக்கும் முன்னெடுப்பாக பொறுப்பாளர் நியமனம் செய்யப்பட்டது.

திருப்போரூர் தொகுதி மாமல்லபுரம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் மாமல்லபுரத்தில் செ.கி.மகளிர் பாசறை மகளிர் உறுப்பினர் சேர்க்கை முகாமை நடத்தினர். இதில் மாவட்ட,தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

திருப்போரூர் தொகுதி திருக்கழுக்குன்றம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருப்போரூர் தொகுதி திருக்கழுக்குன்றத்தில் பேரூராட்சி பொறுப்பாளர்கள் செ.கி.மாவட்ட செயலாவர் அண்ணன் கேசவன் அவர்கள் தலைமையில் தொகுதி தலைவர் திரு.சந்தோஷ்குமார் முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடந்தது.

பெரியகுளம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெரியகுளம் தொகுதி சருத்துப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் 02.07.2023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

பெரியகுளம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெரியகுளம் தொகுதி தேவதானப்பட்டி பேரூராட்சி தே.காமக்காபட்டியில் 09.07.2023 உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
Exit mobile version