க.எண்: 2026110281
நாள்: 10.11.2026
சுற்றறிக்கை:
நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறை மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், நாம் தமிழர் கட்சியின் எழுச்சிமிகு இளைஞர் பாசறையினுடைய அடுத்தக்கட்டச் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கவும், நிகழ்வுகள் குறித்து திட்டமிடவுமான ‘மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு’ எதிர்வருகிற ஐப்பசி 28ஆம் நாள் (14-11-2026)
சனிக்கிழமையன்று சென்னையில் நடைபெறவிருக்கிறது. இடம், நேரம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
இந்நிகழ்வில், மாநிலம் முழுவதுமுள்ள இளைஞர் பாசறையின் அனைத்துநிலைப்
பொறுப்பாளர்களும் பங்கேற்பதை உறுதிசெய்ய வேண்டுகிறோம். ஆகவே, வரும் நவம்பர் 12 ஆம் தேதிக்குள் தங்களது வருகையை பின்வரும் எண்ணுக்கு அழைத்து உறவுகள் பதிவுசெய்ய வேண்டுமெனக் கோருகிறோம்.
முன்பதிவு செய்ய தொடர்புகொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்,
இரமேசுபழனியப்பன் – 97104 11873
சாரதிராஜா – 9500767589
சல்மான் – 90031 93815
கோபி சேரலாதன் – 81488 74001
பாலபுகழேந்தி – 7598076309
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி



