முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – மாஞ்சோலை மக்களின் வாழ்வாதாரமான நிலங்களை மீட்க, தென் இந்திய ஃபார்வார்டு பிளாக் (தமிழ்நாடு) கட்சியின் ஒருங்கிணைப்பில், அனைத்துக்கட்சிகளின் மாபெரும் ஆர்ப்பாட்டம் கண்டனவுரை: செந்தமிழன் சீமான்

16

க.எண்: 2026090254
நாள்: 11.09.2026

மேகமலை – மாஞ்சோலை மக்களின் வாழ்வாதாரமான நிலங்களை மீட்க, தென் இந்திய ஃபார்வார்டு பிளாக் (தமிழ்நாடு) கட்சியின் ஒருங்கிணைப்பில், மதுரை பழங்காநத்தம், ஜெயம் திரையங்கம் எதிரில் நாளை ஆவணி 26ஆம் நாள் சனிக்கிழமை (12-09-2026) மாலை 03 மணி முதல் அனைத்துக்கட்சிகள் ஒன்றிணைந்து நடத்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று கண்டன
உரையாற்றவிருக்கிறார்.
மேகமலை

மாஞ்சோலை மக்களின்
வாழ்வாதாரமான நிலங்களை மீட்க,
தென் இந்திய ஃபார்வார்டு பிளாக் (தமிழ்நாடு) கட்சியின் ஒருங்கிணைப்பில்,
அனைத்துக்கட்சிகளின்
மாபெரும் ஆர்ப்பாட்டம்
கண்டனவுரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்: ஆவணி 26 சனிக்கிழமை | 12-09-2026 மாலை 03 மணி முதல்
இடம்: மதுரை பழங்காநத்தம்
ஜெயம் திரையரங்கம் எதிரில்
இந்நிகழ்வில், கட்சி மற்றும் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version