முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – வீரப்பெரும்பாட்டன்கள் தீரன் சின்னமலை கட்டுத்தடிக்காரர் குணாளன் வல்வில் ஓரி நினைவு நாள் மலர்வணக்க நிகழ்வு

10

க.எண்: 2026070232
நாள்: 30.07.2026

வீரப்பெரும்பாட்டன்கள் தீரன் சின்னமலை, கட்டுத்தடிக்காரர் குணாளன்,வல்வில் ஓரி ஆகியோரின் நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வருகின்ற ஆடி 18ஆம் நாள் 03-08-2026 திங்கள்கிழமையன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளோடு, ஓடாநிலை, அறச்சலூர் நினைவிடங்களில் மலர்வணக்கம் செலுத்தவிருக்கிறார்.
வீரப்பெரும்பாட்டன்கள்
தீரன் சின்னமலை கட்டுத்தடிக்காரர் குணாளன் வல்வில் ஓரி
நினைவு நாள் மலர்வணக்க நிகழ்வு
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்: ஆடி 18 திங்கள்கிழமை | 03-08-2026 காலை 10 மணிக்கு
வெள்ளோடு

இடம்: ஓடாநிலை

அறச்சலூர்
ஈரோடு மாவட்டம்
இந்நிகழ்வுகளில், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்

Exit mobile version