தலைமை அறிவிப்பு – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிவுறுத்தலின் பேரில், அவர்களின் கும்மிடிப்பூண்டியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

2

க.எண்: 2026060205
நாள்: 19.06.2026

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்திருப்பதைக் கண்டித்தும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மகளிர் பாசறை மற்றும் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்டம் சார்பாக ஆனி 07ஆம் நாள் (21-06-2026) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் கும்மிடிப்பூண்டியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும்
எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மற்றும் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்டம் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் :
ஆனி 07 ஞாயிற்றுக்கிழமை | 21-06-2026 காலை 10 மணிக்கு
இடம்: கும்மிடிப்பூண்டி
(ஆண்டவர் மளிகை கடை எதிரில்)
இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version