க.எண்: 2026050193
நாள்: 12.05.2026
சுற்றறிக்கை:
சட்டமன்றத் தேர்தல் – 2026
தொகுதி தேர்தல் வரவு-செலவு கணக்கினை
மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் வழங்குதல் தொடர்பாக
சட்டமன்றத் தேர்தல் – 2026க்கான முடிவுகள் வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிக்கான தேர்தல் வரவு-செலவு கணக்கினை வழங்க தவறுபவர், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி அடுத்த தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை இழக்க நேரிடும் என்பதைக் கருத்திற்கொண்டு, நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும், தங்கள் தொகுதிக்கான தேர்தல் வரவு-செலவு கணக்கினை வருகின்ற 02-06-2026ஆம் நாளுக்குள் மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் உரிய முறையில் வழங்கி அதற்கான சான்றினைப் பெற்றுக் கொள்ள வேண்டுமெனவும், அதனை உறுதி செய்து அதன் விவரங்கள் அடங்கிய நகலைத் தலைமை அலுவலகத்திற்கு கட்சியின் மாநில, மண்டலப் பொறுப்பாளர்கள் தெரிவிக்க வேண்டுமெனவும் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். -தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி



