முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மாநிலப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் மே-18, தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்திற்கான கலந்தாய்வு

24

க.எண்: 2026050189
நாள்: 11.05.2026

தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டக் களப்பணிகள் குறித்த செங்கல்பட்டு மாவட்டக் கலந்தாய்வு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மாநிலப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் மே-18, தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திட்டமிட்டு செயற்படுத்துவதற்காக செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி மற்றும் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு நாளை 12-05-2026 மாலை 04 மணியளவில் பொதுக்கூட்டத் திடலில் ( செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் நகராட்சித் திடலில் ) நடைபெறவிருக்கிறது.
இக்கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் கிளைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

Exit mobile version