அன்னையர் நாள் வாழ்த்துகள்!

18

அன்னையர் நாள் வாழ்த்துகள்!

‘சொர்க்கம் என்பது தாயின் காலடியில் இருக்கிறது!’ என்கிறார் இறைதூதர் நபிகள் நாயகம்! ‘என் வாழ்க்கையில் நான் கற்ற மிகப்பெரிய பாடங்கள் என் தாயிடமிருந்தே வந்தவை!’ என்கிறார் அண்ணல் காந்தியடிகள். ‘என்னுடைய எல்லா சாதனைகளுக்கும் காரணம் என் தாய்தான்!’ என்கிறார் அபிரகாம் லிங்கன். ‘தாயின் அன்பை விட உயர்ந்தது உலகில் எதுவுமில்லை!’ என்கிறார் வில்லியம் ஷேக்ஸ்பியர். ‘அம்மாவின் அன்பும் தியாகமும் குழந்தையின் வெற்றிக்கான முதல் விதை!’ என்கிறார் நம்முடைய ஐயா அப்துல்கலாம். ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் தாய்தான்! ஈன்ற தாய்க்கு ஒப்பாக இவ்வுலகில் எதுவுமே இல்லை! எல்லோருடைய இடத்தையும் தாய் நிரப்பிவிடுகிறாள்! ஆனால், தாயின் இடத்தை எவராலும் நிரப்பிவிட முடியாது! மனிதனுக்கு மட்டுமல்லாது, உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானதாக இருக்கும் புனித உறவு தாய் மட்டும்தான்! வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்! கண்கள் இல்லாமல் பார்த்தேன்! காற்று இல்லாமல் சுவாசித்தேன்! கவலையில்லாமல் வாழ்ந்தேன்! என் தாயின் கருவறையில்! கோயிலில் ஒரு கருவறை இருக்கிறது அது நாம் உருவாக்கியது; தாயிடம் ஒரு கருவறை இருக்கிறது, அது நம்மையே உருவாக்கியது! நாம் எவ்வளவு பெரிய உயரத்திற்குப் போனாலும் நம்மைப் பார்த்து பொறாமைப்படாத ஒரே உயிர் உலகத்தில் உண்டென்றால், அது நம்மைப் பெற்றெடுத்த அன்னையே! உலகத்தில் உள்ள செல்வங்கள் அனைத்தையும் ஒரு தட்டிலும், தாயின் பேரன்பை மற்றொரு தட்டிலும் வைத்தால்; தாயின் பேரன்பு இருக்கும் தட்டுதான் தாழ்ந்து இருக்கும்! தாய்மையைப் போற்றுவோம்! தாய்மையை வணங்குவோம்! நம் தாய்மார்கள் அனைவருக்கும் அன்பு நிறைந்த அன்னையர் நாள் வாழ்த்துகள்!

Exit mobile version