க.எண்: 2025120994
நாள்: 01.12.2025
அறிவிப்பு:
சேலம் வடக்கு மண்டலம் – பொறுப்பாளர்கள் மாற்றம்
தமிழ் மீட்சிப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட 55ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த கு.பாண்டியராசன் (07393438545) அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். அதேபோன்று, பெரமனுர் மாவட்டச் செயலாளராக இருந்த 177ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த லோ.மதன் (07430102668) அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
அ.வேலுமணி (18699444456) அவர்கள் தகவல் தொழில்நுட்பப் பாசறையின் சேலம் வடக்கு சின்னதிருப்பதி மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு மாற்றம் செய்யப்படுகிறார். அதேபோன்று, 116ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த இர.சிங்காரவேலன் (16358017335) அவர்கள் இளைஞர் பாசறையின் சேலம் வடக்கு ஜான்சன்பேட்டை மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு மாற்றம் செய்யப்படுகிறார்.
116ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த அ.முகுந்தன் (14158340475) அவர்கள் தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். அதேபோன்று, 126ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த வா.இரஞ்சித்குமார் (18237179666) அவர்கள் சேலம் வடக்கு பெரமனுர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.
பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி



