தலைமை அறிவிப்பு – செந்தமிழன் சீமான் அவர்களின் வழிகாட்டு நெறிமுறைகள்

18

க.எண்: 2025121012

நாள்: 11.12.2025

அறிவிப்பு:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கட்சிக் கொடி வெளியிடப்பட்டு ஒரே மாதிரியாகப் பயன்படுத்தி வருவதைப்போன்றே, தற்போது விவசாயி சின்னம் பொறித்த கட்சித் துண்டு மற்றும் சீருடை ஆகியவை தலைமை அலுவலகத்தில் இருந்து வடிவமைப்பு செய்து வெளியிடப்பட்டு இருக்கிறது. கட்சித் துண்டின் அளவு
(நீளம் 60” அங்குலம் x அகலம் 6.5” அங்குலம்), வண்ணம், எழுத்துரு, படங்கள் என எதுவும் மாற்றம் செய்யாமலும்,
சீருடையில் மட்டும் தொகுதி பெயர் மாற்றம் செய்தும் அச்சிட்டு பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த வடிவமைப்புக் கோப்புகள் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://www.naamtamilar.org/category/downloads/

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

 

 

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி