க.எண்: 2025121011
நாள்: 09.12.2025
அறிவிப்பு:
| VIGIL மக்கள் கருத்து மன்றம் நடத்தும் பாரதி கண்ட வந்தே மாதரம் சிறப்புரை: நாள்: கார்த்திகை 25 | 11-12-2025 மாலை 06:30 மணியளவில் இடம்: இராஜா அண்ணாமலை மன்றம் |
பெரும் பாவலன் பாட்டன் பாரதியார் அவர்களின் பிறந்தநாளையொட்டி,
VIGIL மக்கள் கருத்து மன்றம் சார்பாக, வருகின்ற 11-12-2025 அன்று மாலை 06:30 மணியளவில், சென்னை பாரிஸ் ஜார்ஜ் டவுன், இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறவிருக்கும் பாரதி கண்ட வந்தே மாதரம் நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று சிறப்புரையாற்றவிருக்கிறார்.
இந்நிகழ்வில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி



