க.எண்: 2025121005
நாள்: 05.12.2025
அறிவிப்பு:
| புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வுதலைமை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: கார்த்திகை 20 | 06-12-2025 காலை 10 மணியளவில் இடம்: அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபம்
|
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய நினைவுநாளையொட்டி, 06-12-2025 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை, அடையாறு, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
இந்நிகழ்வில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி



