தலைமை அறிவிப்பு – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவுறுத்தல்

4

க.எண்: 2025121001

நாள்: 03.12.2025

சுற்றறிக்கை:

 

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து இன்று (03-12-2025) தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பாக சென்னை மாவட்டத்தில் மண்டலவாரியாக நடத்திய கலந்தாய்வுக் கூட்டங்களில் வாக்காளர்களின் இறப்பு மற்றும் இடமாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், தெரிவிக்கப்பட்ட தகவல்களின் படி, ஒவ்வொரு தொகுதியிலும் ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் இறப்பு மற்றும் இடமாற்றம் செய்தவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதேபோல அனைத்து தொகுதிகளிலும் இறுதி வாக்காளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே இதன் உண்மை தன்மையை ஆராயும் பொருட்டு, நாம் தமிழர் கட்சியின் மாநில மற்றும் மண்டலப் பொறுப்பாளர்கள் வாக்கக நிலை முகவர்கள் (BLA1 & BLA2) மூலமாக தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இறப்பு மற்றும் இடமாற்றம் செய்தவர்கள் பட்டியலைப் பெற்று, தாங்கள் சார்ந்துள்ள பகுதியில் உள்ள வாக்காளர்களை அணுகி, பட்டியலில் உள்ள இறப்பு மற்றும் இடமாற்றம் தகவல்கள் சரிதானா என்று உறுதிசெய்ய வேண்டும், பிழைகள் இருப்பின் உடனடியாக அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களைச் செய்து கொடுத்து, அவர்களது வாக்குரிமையை உறுதி செய்ய வேண்டும் என தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

எனவே,  கட்சியின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் மிக முக்கியமான இப்பணியில் ஒருங்கிணைந்து, விரைந்து செயலாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

 

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி