தலைமை அறிவிப்பு – சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூகநீதியும் பஞ்சமர் நில மீட்பும், தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்றமும் மாபெரும் பொதுக்கூட்டம்

6

க.எண்: 2025120998
நாள்: 01.12.2025

நாம் தமிழர் கட்சி சார்பாக, சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூக நீதியும், பஞ்சமர் நில மீட்பும்! தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்றமும் மாபெரும் பொதுக்கூட்டம் வருகின்ற கார்த்திகை 21ஆம் நாள் (07-12-2025) மாலை 04 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை, பெருந்தலைவர் தாத்தா காமராசர் சிலை அருகில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.
சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூகநீதியும் பஞ்சமர் நில மீட்பும்,
தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்றமும் மாபெரும் பொதுக்கூட்டம்
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: கார்த்திகை 21 | 07-12-2025 மாலை 04 மணியளவில்
இடம்: உளுந்தூர்பேட்டை
பெருந்தலைவர் தாத்தா காமராசர் சிலை அருகில் கள்ளக்குறிச்சி மாவட்டம்
இம்மாபெரும் மாநாட்டில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி