தலைமை அறிவிப்பு – கடலூர் மாவட்ட மாநில ஒருங்கிணைப்பாளராக நியமனம்

3

க.எண்: 2025120994
நாள்: 01.12.2025

அறிவிப்பு:
கடலூர் விருத்தாச்சலம் மண்டலத்திற்கான, மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட 81ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த அ.பாரதிதாசன் (03462009756) அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். அதேபோன்று, தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச் செயலாளராக இருந்த 13ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த சே.ராஜதுரை (14542052162) அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
கடலூர் விருத்தாச்சலம் மண்டலச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, 125ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த சி.முருகலட்சுமி (18346951632) அவர்கள் கடலூர் விருத்தாச்சலம் மண்டலச் செயலாளராக நியமிக்கப்பாடுகிறார்.
இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி