புதிய தலைமுறை தொலைக்காட்சி தமிழக அரசின் கேபிள் சேவையிலிருந்து நீக்கம்! – சீமான் கடும் கண்டனம்

2

தமிழக அரசின் கேபிள் சேவையிலிருந்து புதிய தலைமுறை தொலைக்காட்சியை நீக்கியிருக்கும் திமுக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டதற்காக ஒரு தொலைக்காட்சியையே இருட்டடிப்பு செய்யும் இப்போக்கு கருத்துரிமைக்கு எதிரான அச்சுறுத்தல்; ஊடகங்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் நேரடி மிரட்டல்!

சனநாயகம், கருத்துச்சுதந்திரம் என்றெல்லாம் வாய்கிழியப் பேசிவிட்டு, ஊடகங்கள் மீது ஆதிக்கம் செய்வதும், அடக்குமுறைகளை செலுத்துவதும் வெட்கக்கேடானது.

ஊடகத்தின் மீதான ஒடுக்குமுறையைக் கைவிட்டு உடனடியாக தமிழ்நாடு முழுவதும் புதிய தலைமுறை தொலைக்காட்சி தெரியும்படி அரசு கேபிளில் மீண்டும் இணைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

https://x.com/Seeman4TN/status/1975503870643094003

– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி