உலகம் முழுவதும் இயன்முறை மருத்துவத் தொண்டாற்றி உடலியக்கத் தடைகள் போக்கும் இயன்முறை மருத்துவர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைவுகூரும் நாள் இன்று (செப்டம்பர் – 08)!
மருந்துகள் தோற்கும் இடத்தில்
மருத்துவப் பயிற்சிகள் மூலம் உடலின் இடர் களைந்து துயர் தீர்க்கும் இயன்முறை மருத்துவர்களின் தொண்டுள்ளம் தாய்க்கு இணையானது.
மருத்துவத் துறையில் இயன்முறை மருத்துவர்களுக்கு உரிய அங்கீகாரமும், மதிப்பும் ஒன்றிய – மாநில அரசுகள் விரைந்து வழங்க வேண்டும். இயன்முறை மருத்துவர்களின் கோரிக்கைகளை அங்கீகரித்து, தனி ஆணையம் (Physiotherapy Council) அமைத்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் வேண்டும்.
நலமிக்க முதுமை (Healthy Ageing) எனும் இந்த ஆண்டிற்கான கருப்பொருளுடன்
வாதம் என்னும் விலங்கை உடைத்து,
முடியாது எனும் எண்ணம் தகர்த்து,
மருந்தில்லா மருத்துவம் செய்யும் மந்திரக்காரர்களுக்கு
என் அன்பு நிறைந்த உலக இயன்முறை மருத்துவர் நாள் நல்வாழ்த்துகள்!