க.எண்: 2025080746
நாள்: 27.08.2025
சுற்றறிக்கை:
மரங்களின் மாநாடு
வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தரும் உறவுகளுக்கான
தங்கும் விடுதி
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆவணி 14ஆம் நாள் 30-08-2025 காலை 10 மணிமுதல் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், அருங்குளம் வெற்றி தோட்டத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மரங்களோடு பேசுவோம்! மரங்களுக்காகப் பேசுவோம்! எனும் தலைப்பில் “மரங்களின் மாநாடு” நடைபெறவிருக்கின்றது.
இம்மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து முன்கூட்டியே வருகை தரும் உறவுகள் இரவு தங்கி, உறங்கி, குளித்து உடைமாற்றி நிகழ்வுக்கு ஆயத்தமாக ஏதுவாக 29-08-2025 மாலையிலிருந்து 30-08-2025 மாலை வரை திருத்தணி பி.எஸ்.ஆர். மகால் திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உறவுகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
இருப்பிட வழிகாட்டி |
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி