க.எண்: 2025080708
நாள்: 05.08.2025
அறிவிப்பு:
பரந்தூர் வானூர்தி நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, 1100 நாட்களுக்கும் மேலாகப் போராடிவரும் மக்களுக்கு ஆதரவாகவும், வளர்ச்சி என்ற பெயரில் விளைநிலங்களை அழிப்பதைக் கண்டித்தும், நாம் தமிழர் கட்சி நடத்தும் நிலம் இழந்தால் பலம் இழப்போம்! மாபெரும் பொதுக்கூட்டம்எழுச்சியுரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சிநாள்: ஆவணி 09 | 25-08-2025 மாலை 04 மணியளவில்இடம்: மாநகரப் பேருந்து நிலையம் எதிரில் காஞ்சிபுரம்
|
வேளாண் விலைநிலங்களையும், நீர் நிலைகளையும், குடியிருப்புகளையும் அழித்து, ஏறத்தாழ 5000 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைக்க, வலுக்கட்டாயமாக நிலங்களை அபகரிக்கத் துடிக்கும் ஒன்றிய-மாநில அரசுகளுக்கு எதிராக தொடர்ந்து 1100 நாட்களுக்கும் மேலாகப் போராடிவரும் மக்களுக்கு ஆதரவாகவும், வளர்ச்சி என்ற பெயரில் விளைநிலங்களை அழிப்பதைக் கண்டித்தும், நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் ஆவணி 09ஆம் நாள் (25.08.2025) மாலை 04 மணியளவில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில், ‘நிலம் இழந்தால் பலம் இழப்போம்!’ மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
இப்பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,
நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி