முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை நடத்தும் நிலம் இழந்தால் பலம் இழப்போம்! மாபெரும் பொதுக்கூட்டம்

34

க.எண்: 2025080708அ

நாள்: 05.08.2025

அறிவிப்பு:

பரந்தூர் வானூர்தி நிலையத் திட்டத்தை எதிர்த்தும்,
வளர்ச்சி என்ற பெயரில் வளங்கள் சுரண்டப்படுவதைக் கண்டித்தும்,
சுற்றுச்சூழலைப் பாழாக்கும் அனைத்துத் திட்டங்களை எதிர்த்தும்,
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை நடத்தும்
நிலம் இழந்தால் பலம் இழப்போம்!
மாபெரும் பொதுக்கூட்டம்

எழுச்சியுரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி

நாள்: ஆவணி 09 | 25-08-2025 | மாலை 04 மணியளவில்

இடம்: மாநகரப் பேருந்து நிலையம் எதிரில்
காஞ்சிபுரம்

 

வேளாண் விலைநிலங்களையும், நீர் நிலைகளையும், குடியிருப்புகளையும் அழித்து, ஏறத்தாழ 5000 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைக்க, வலுக்கட்டாயமாக நிலங்களை அபகரிக்கத் துடிக்கும் ஒன்றிய-மாநில அரசுகளைக் கண்டித்தும், வளர்ச்சி என்ற பெயரில் வளங்கள் சுரண்டப்படுவதைக் கண்டித்தும், சுற்றுச்சூழலைப் பாழாக்கும் அனைத்துத் திட்டங்களை எதிர்த்தும், நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆவணி 09ஆம் நாள் (25.08.2025) மாலை 04 மணியளவில் காஞ்சிபுரத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் ‘நிலம் இழந்தால் பலம் இழப்போம்!’ மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

இப்பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,
நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version