க.எண்: 2025080703
நாள்: 05.08.2025
அறிவிப்பு:
தூய்மைப் பணியாளர்களைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும், பணிநிரந்தரம் செய்யக்கோரியும்
நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை நடத்தும் கோரிக்கையுரை: நாள்: இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்
|
தூய்மைப் பணியாளர்களைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும், பணிநிரந்தரம் செய்யக்கோரியும், நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை சார்பாக, ஆடி 25ஆம் நாள் (10.08.2025) காலை 10 மணியளவில் சென்னை மாவட்டம், துறைமுகம் தொகுதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
இம்மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி