க.எண்: 2025070699
நாள்: 01.08.2025
அறிவிப்பு:
கொங்கு மண்டலத்தில் நம் வீரத்தமிழ் பாட்டன்களுக்கு புகழ் வணக்க நிகழ்வுகள்:
நாம் தமிழர் கட்சி சார்பாக நம் வீரப்பாட்டன்கள் வல்வில் ஓரி, தீரன் சின்னமலை, குணாளன் நாடார் அகியோருக்கு புகழ்வணக்க நிகழ்வுகள் வருகின்ற ஆடி 18 (03.08.25) ஞாயிற்றுக் கிழமை அன்று கொங்கு மண்டலத்தில் பின்வரும் இடங்களில் நடைபெறவுள்ளது.
1. நாமக்கல்
நாம் தமிழர் கட்சி நாமக்கல் மாவட்டம் சார்பாக கடையேழு வள்ளல்களில் ஒருவரான, கொல்லிமலை அரசன் வல்வில் ஆதன் ஓரி அவர்களின் திருவுருவ சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட உள்ளது. இடம் : செம்மேடு பேருந்து நிலையம் அருகில், கொல்லிமலை, நாமக்கல் மாவட்டம். நாள் : ஆடி 18 (03/08/2025) ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 9:30 மணி
இந்நிகழ்வில் நாமக்கல் மாவட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்டம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
2. சேலம்
நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம் சார்பாக வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் 220-ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது. இடம் : தீரன் சின்னமலை நினைவுத்தூண், சங்ககிரி – ஈரோடு பிரிவு சாலை, சங்ககிரி, சேலம் மாவட்டம். நாள் : ஆடி 18 (03/08/2025), ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : மாலை 3:00 மணி
இந்நிகழ்வில் சேலம் மாவட்டத்தில் உள்ள கட்சியின் மாநில, மண்டல, மாவட்டம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
3. ஈரோடு
உறவுகள் ஒன்று கூடும் இடம்: தலவு மலை பேருந்து நிறுத்தம், அரச்சலூர்.
நேரம்: காலை 10.00 மணி,
நிகழ்வு நடைபெறும் இடங்கள் பின்வருமாறு;-
காலை
10.30
வீரத்தமிழ் பாட்டன்
கொட்டாரக்காடு,
மணி
வல்வில் ஓரி
வடுகபட்டி,
ஆடி 18
ஞாயிற்றுக்
முற்பகல்
கிழமை
11.00
வீரத்தமிழ் பாட்டன்
(03.08.25) மணி
தீரன் சின்னமலை
தீரன் சின்னமலை மணி மண்டபம், ஓடாநிலை.
நண்பகல்
12.00
வீரத்தமிழ் பாட்டன்
மணி
குணாளன் நாடார்
செல்லம்பாளையம், நத்தக்காடையூர்.
`நம் வீரத்தமிழ் பாட்டன்களின் வீரப்புகழ் போற்றும் இந்நிகழ்வுகளில் இந்நிகழ்வில் ஈரோடு, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள கட்சியின் மாநில, மண்டல, மாவட்டம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின்
பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
–
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி