தலைமை அறிவிப்பு – பட்டியல் வெளியேற்றம் தேவேந்திர குல வேளாளர் எங்களைப் பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றக் கோரி மாபெரும் பொதுக்கூட்டம்

96

க.எண்: 2025070688

நாள்: 24.07.2025

அறிவிப்பு:

பட்டியல் வெளியேற்றம்
தேவேந்திர குல வேளாளர்
எங்களைப் பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றக் கோரி
மாபெரும் பொதுக்கூட்டம்
தலைமை:
செந்தமிழன்
சீமான்நாள்:
ஆடி 17 | 02-08-2025 மாலை 05 மணியளவில்இடம்:
தேனி (பங்களா மேடு)

 

தேவேந்திர குல வேளாளர் மக்கள் தங்களை பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றக்கோரும் நெடுநாள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பாக ஆடி 17ஆம் நாள் (02.08.2025) மாலை 05  மணியளவில் தேனி பங்களாமேடு பகுதியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி