முகப்பு தலைமைச் செய்திகள்

ஆசிரியர்கள் கைது! – ஆசிரியர்களை நேரில் சந்திக்க சீமானுக்கு காவல்துறை அனுமதி மறுப்பு!

54

பணி நிரந்தரம் கோரி சென்னை பள்ளிக்கல்வி இயக்குநரக வளாகத்தில் அறவழியில் போராடி வந்த பகுதி நேர ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து திருவல்லிக்கேணி சமுதாய நலக்கூடத்தில் அடைத்துவைக்கப்பட்டனர்.

17-07-2025 அன்று நண்பகல் 12 மணியளவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை நேரில் சந்தித்து கோரிக்கைகளைக் கேட்டறிய சென்ற போது காவல் துறை தடுத்து நிறுத்தினர் ஆசிரியர்களை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து கோரிக்கைகள் வெல்ல நாம் தமிழர் கட்சி துணைநிற்கும் என உறுதியளித்தார்.

17-07-2025 - பணி நிரந்தரம் கோரி போராடிய பகுதி நேர ஆசிரியர்கள் கைது - களத்தில் சீமான் | சென்னை

Exit mobile version