தலைமை அறிவிப்பு – மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டத்திற்கான களப்பணிகளைத் திட்டமிடுவது தொடர்பாக கலந்தாய்வு

37

க.எண்: 2025040374

நாள்: 17.04.2025

மே 18, கோவையில் நடைபெறவிருக்கும்

மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டத்திற்கான

களப்பணிகளைத் திட்டமிடுவது தொடர்பாக

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த
கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், மற்றும் சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான் அவர்கள்
சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்
நாள்:
18-04-2025 காலை 10 மணி முதல்

இடம்:
செல்வ மகால் திருமண மண்டபம்
சென்னை கே.கே.நகர்

மே 18, இனப் படுகொலை நாளையொட்டி, வருகின்ற 18-05-2025 அன்று, மாலை 04 மணியளவில் கோயம்புத்தூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெறவிருக்கும் மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டத்திற்கான களப்பணிகளைத் திட்டமிட்டு, களப்பொறுப்பாளர்களை நியமிப்பதற்காக நாளை 18-04-2025 காலை 10 மணியளவில் சென்னை கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகரில் அமைந்துள்ள செல்வ மகால் திருமண மண்டபத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

இந்நிகழ்வில் மேற்குறிப்பிட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு


கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி