‘சொல் தமிழா சொல்’ மாபெரும் பேச்சுப்போட்டி: சீமான் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்பு!

96

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தமிழ்ப் பேராயம் சார்பாக மாநில அளவில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான ‘சொல் தமிழா சொல்’ மாபெரும் பேச்சுப்போட்டியின் இறுதிச்சுற்று, 07-04-2025 அன்று, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் கலையரங்கத்தில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தரும், இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பெருமதிப்பிற்குரிய ஐயா முனைவர் பாரிவேந்தர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி, மாணவ-மாணவியரை வாழ்த்தி உரையாற்றினார்.

சீமான்... சீமான்... அடங்காத மாணவர்களின் ஆர்ப்பரிப்பு | அரங்கம் முழுவதும் பறந்த விசில் சத்தம் | SRM

07.04.2025 சொல் தமிழா சொல் மாபெரும் பேச்சுப்போட்டி | மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கிய சீமான்

சொல் தமிழா சொல் மாபெரும் பேச்சுப்போட்டி | SRM கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் | சீமான் வாழ்த்துரை