அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், சனநாயக ஆற்றல்களுக்கும் எனது அன்பும், நன்றியும்! – சீமான் நெகிழ்ச்சி

361

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்தில், தனித்த ஊடக வலிமையற்ற நாம் தமிழர் கட்சியின் பரப்புரைச் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்த அச்சு மற்றும் காட்சி ஊடக நண்பர்களுக்கும், அறத்தின் பக்கம் நின்று ஆண்ட மற்றும் ஆளும் கட்சியினர் நிகழ்த்திய தேர்தல் முறைகேடுகளையும், வன்முறை வெறியாட்டங்களையும் வெளிக்கொணர்ந்து தங்களால் இயன்ற அளவு சனநாயகம் வீழ்ந்துவிடாமல் காத்துநின்ற ஊடகவியலாளர்களுக்கும், சனநாயக ஆற்றல்களுக்கும் எனது அன்பையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் எத்தகைய பெறுமதி மிக்கது என்பதை எடுத்துக் கூறி எங்களை வாழ்த்திய மூத்த பத்திரிகையாளர்களான ஐயா மணி அவர்களுக்கும், ஐயா ஏகலைவன் அவர்களுக்கும், ஐயா சாவித்திரி கண்ணன் அவர்களுக்கும், அம்மையார் ‘தி வீக்: லட்சுமி சுப்ரமணியன் அவர்களுக்கும், என்றும் எங்களை ஆதரிக்கும் ஐயா இரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கும் மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி