பணிநீக்கம் செய்யப்பட்ட கொரோனா பேரிடர் கால ஒப்பந்த செவிலியர்களின் உண்ணாநிலைப் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு

111

மருத்துவப் பணியாளர் தேர்வு (MRB) மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில், கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் பணியமர்த்தப்பட்ட 2472 செவிலியர்களை பணிநீக்கம் செய்யும் அரசாணையைத் திரும்பப் பெறக்கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 05-01-2023 காலை 09 மணிமுதல் மாலை 6 மணிவரை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

🔴நேரலை 05-01-2023 செவிலியர்கள் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு | MRB Covid Nurses Protest Seeman LIVE

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் 05-01-2023 அன்று மாலை 04 மணியளவில் செவிலியர்களின் போராட்டத்தில் பங்கேற்று, முழு ஆதரவு தெரிவித்து, கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினார்.

05-01-2023 சீமான் கண்டனவுரை - செவிலியர்கள் போராட்டம் | MRB Covid Nurses Protest Seeman Speech

05-01-2023 சென்னை - சீமான் செய்தியாளர் சந்திப்பு - செவிலியர்கள் போராட்டம் | MRB Covid Nurses Protest