இன்று உலக மீனவர் நாள்!

109

இன்று உலக மீனவர் நாள்!

இந்திய நாட்டின் அந்நியச்செலவாணியை ஈட்டித் தருவதிலும், புரதச்சத்துமிக்க உணவுப்பொருட்களை மக்களுக்குக் கிடைக்கச் செய்வதிலும் மீன்பிடித்தொழில் முதன்மையானதாக விளங்குகிறது. வேளாண்மை போலவே மீன்பிடித்தலும் தமிழர்களின் வாழ்வியலில் ஓர் அங்கமாகும். அதனைச்செய்து வரும் கடலோடிகளான மீனவப்பெருங்குடி மக்களைப் போற்றித் தொழும் நாள் இத்திருநாளில், எனது உளப்பூர்வமான வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இலங்கைக்கடற்படையின் தொடர் தாக்குதலாலும், இயற்கைச் சீற்றங்களினாலும் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நமது மீனவச்சொந்தங்களின் வாழ்வாதாரமும், மீன்பிடித்தொழிலுமே கேள்விக்குறியாகி நிற்கும் தற்காலத்தில் அவர்களைக் காக்கவும், அவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும் குரலெழுப்புவோம்!
மீனவர்களைக் காப்போம்! மீன்பிடித்தொழிலைப் போற்றுவோம்!