முகப்பு தலைமைச் செய்திகள்

அறிவிப்பு: எது உண்மையான சமூகநீதி? குடிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தக்கோரி மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

396

க.எண்: 2022080340

நாள்: 08.08.2022

அறிவிப்பு: எது உண்மையான சமூகநீதி?

குடிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தக்கோரி
மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

தலைமை:

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை

நாள்: 13-08-2022 சனிக்கிழமை,
மாலை 04 மணியளவில்

உண்மையான சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு, குடிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக நடத்திட வலியுறுத்தி வருகின்ற 13-08-2022 சனிக்கிழமையன்று
மாலை 04 மணியளவில், சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவிருக்கிறது.

இம்மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல (நாடாளுமன்ற), மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், பகுதி, ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

Exit mobile version