முகப்பு கட்சி செய்திகள்

மன்னார்குடி தொகுதி – துயர் துடைப்பு உதவிப்பொருட்கள்

114

மன்னார்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்கள் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு, அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வழியின்றி தவித்துவரும் ஈழச்சொந்தங்களுக்கு உதவுவதற்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாட்டில் இருந்து அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, மாவு, ரொட்டி, பிஸ்கட் போன்ற உணவுப்பொருட்களும், துயர்துடைப்பு உதவிப்பொருட்களும் சேகரிக்கப்பட்டு இலங்கையில் உள்ள நம் ஈழச்சொந்தங்களுக்கு அனுப்பப்படவிருக்கிறது.

தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பேரறிவிப்பையடுத்து, கடலூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்களை வாகனத்தின் மூலம் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் தொகுதி தலைவர் தென்பரை இராக.பாஸ்கர், செயலாளர் பரவாக்கோட்டை ராஜேஷ், பொருளாளர் கோவில்வெண்ணி கண்ணன், துணைத்தலைவர் மேலவாசல் பாலு, துணைச்செயலாளர் நீடாமங்கலம் சித்திக் உட்பட நாம் தமிழர் உறவுகள் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version