விழித்தெழு தமிழா! – அரசியல் கருத்தரங்கம் | சீமான் எழுச்சியுரை [ காணொலி மற்றும் புகைப்படங்கள்]

297

நாம் தமிழர் கட்சி  மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் விழித்தெழு தமிழா” அரசியல் கருத்தரங்கமானது, 13-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிமுதல் மாலை 06 மணி வரை முழுநாள் நிகழ்வாக சென்னை, மதனந்தபுரம், முகலிவாக்கம் முதன்மைசாலையில் அமைந்துள்ள,
ஸ்ரீ எஸ்.ஏ.கே.ஜெய் மாருதி மகாலில் நடைபெற்றது.

காலை அமர்வில், தமிழ்த்தேசிய தன்னுரிமைக் கட்சித் தலைவர் அ.வியனரசு அவர்களும், தமிழ் தேசிய கிருத்துவர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மை.பா.சேசுராஜ் அவர்களும், சமூக செயற்பாட்டாளர் நாச்சியாள் சுகந்தி அவர்களும், தமிழர் நலப் பேரியக்கம் சோழன் மு.களஞ்சியம் அவர்களும், “எழுகதிர்” திங்களிதழ் ஆசிரியர் முனைவர் அருகோ அவர்களும் கருத்துரையாற்றினர்.

மாலை அமர்வில், நாம் தமிழர் ஆன்றோர் அவையம் புலவர் மறத்தமிழ்வேந்தன் அவர்களும், முல்லை நிலத் தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் கண்ணன் அவர்களும், மருது மக்கள் இயக்கத் தலைவர் செ.முத்துப்பாண்டி அவர்களும், ஆதித்தமிழர் விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் அ.வினோத் அவர்களும், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் பேரறிஞர் கி.வெங்கட்ராமன் அவர்களும் கருத்துரையாற்றினர்.

நிறைவுரையாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் எழுச்சியுரையாற்றினார்.

முழு நிகழ்வு காணொலி:

நேரலை 13-03-2022 சென்னை (மதனந்தபுரம்) விழித்தெழு தமிழா! - அரசியல் கருத்தரங்கம் #VizhithezhuThamizha

சீமான் எழுச்சியுரை - விழித்தெழு தமிழா! - அரசியல் கருத்தரங்கம் #VizhithezhuThamizha 13-03-2022 சென்னை