முகப்பு கட்சி செய்திகள்

பெரியகுளம் தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு

194

பெரியகுளம் தொகுதி தேவதானப்பட்டி பேரூர் சார்பில் தேவதானப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 14.09.2021 அன்று தேவதானப்பட்டி மேட்டுவளைவு பகுதியில் அடிப்படை வசதி வேண்டி மனு வழங்கப்பட்டது.

அப்பகுதியில் வாழும் 69 குடும்பங்கள் வாழும் பகுதி பேரூராட்சி நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்படாத பகுதியில் வருவதாகவும் 11.11.2021 நாளிலிருந்து 15 நாளுக்குள் மனைவரைமுறை செய்து ரசீது போடவும் இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி உத்தரவிட்டுள்ளது.

எனவே இந்த பேரூராட்சி உத்தரவை ரத்து செய்து மனை பகுதியை அங்கீகரித்து ரசீது வழங்க மாவட்ட ஆட்சியர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என
23.11.2021 செவ்வாய் கிழமை இன்று காலை மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. நேரில் ஆய்வு செய்து
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உயர்திரு.முரளிதரன் அவர்கள் உறுதி கூறினார்.

அப்பகுதி பொதுமக்களுடன் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் உறவுகள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு

தேவதானப்பட்டி த.சுரேசு
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308

 

Exit mobile version