திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு 

757

சட்டமன்றத் தேர்தல்-2021 வேட்பாளர்கள் தேர்வு மற்றும் களப்பணிகள் குறித்து அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்வதற்காக சனவரி 22 முதல் 31 வரை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மண்டலவாரியாக தஞ்சாவூர், திருநெல்வேலி, மதுரை, விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், வேலூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுவரும் கலந்தாய்வுக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

முதலாவதாக தஞ்சாவூர், புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள தமிழரசி திருமண மண்டபத்தில் 22-01-2021 அன்று மாலை 4 மணியளவில்  திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

செய்தியாளர் சந்திப்பு

22-01-2021 தஞ்சாவூர் | களப்போராளிகளுடன் கலந்தாய்வு - சீமான் செய்தியாளர் சந்திப்பு #SeemanPressMeet

https://twitter.com/SeemanOfficial/status/1352606839863578629?s=20